கர்ப்பிணி பெண்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்லலாமா..? எப்படி வழிபட வேண்டும்..? எப்போது செல்ல வேண்டும்..?

Temple 2025

நாம் எந்த கடவுளை வணங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலதெய்வ வழிபாடு என்பது நம் குடும்பத்தின் வேர்களை போற்றுவதாகும். அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைக்க வேண்டும் என்றால், குலதெய்வ வழிபாடு முக்கியமாகும். ஒருவரின் வாழ்வில் எந்தவொரு சுப காரியங்களை தொடங்கும் முன், குலதெய்வத்தை வணங்கிவிட்டு தொடங்கினால் அது வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை.


ஆனால், குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செய்வது என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. தினமும் குலதெய்வத்தை வணங்க வேண்டும். அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வது கூடுதல் பலன்களைத் தரும்.

நேர்த்திக்கடன் : குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்கடன்களை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். கோயிலுக்கு செல்லும் போது விளக்கு எண்ணெய், திரி போன்ற சிறிய உதவிகளை செய்யலாம்.

சூரிய வழிபாடு : குலதெய்வ கோயிலுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், வீட்டின் வாசலில் நின்று சூரியனை வணங்கிவிட்டு, குலதெய்வம் இருக்கும் திசையை நோக்கி ஒரு தேங்காயை உடைத்துவிட்டு சுப காரியங்களை தொடங்கலாம்.

வீட்டில் வழிபாடு : சாந்தமான குலதெய்வத்தின் புகைப்படத்தை வீட்டில் வைத்து தினசரி வணங்கலாம். ஆனால், உக்கிரமான தெய்வமாக இருந்தால், அதன் புகைப்படத்தை வீட்டில் வைக்க வேண்டாம்.

கர்ப்பிணிகள் வழிபாடு : கர்ப்பிணிகள் கருவுற்ற முதல் மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்தால் நல்லது. ஆனால், கர்ப்பிணிகள் பொதுவாக கோயில்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்கு காரணம், கோயில்கள் பெரும்பாலும் குன்றுகள், மலைகளில் இருப்பதால் கூட்ட நெரிசல் அல்லது நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது, படிக்கட்டுகள் குறைவாக உள்ள கோயில்களுக்கு பெண்கள் தாராளமாக செல்லலாம். இருப்பினும், சில பெரியவர்கள், கர்ப்பிணிகள் சுவாமி சிலைக்கு அருகில் உள்ள எந்திரங்களின் ஆற்றல் காரணமாக தவிர்க்கலாம் என்றும் சொல்வார்கள்.

இரண்டு கர்ப்பிணிகள் : ஒரே வீட்டில், அதாவது அண்ணி-நாத்தனார் முறையில் இரண்டு கர்ப்பிணிகள் இருந்தால், அவர்கள் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி பார்த்தால், இருவரில் ஒருவரின் குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம் என நம்பப்படுகிறது. ஆனால், சகோதரிகள் இவ்வாறு சந்தித்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லையாம்.

குலதெய்வத்தின் ஆசி : பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் முடியை குலதெய்வ கோயிலில் எடுப்பது, காது குத்துவது போன்ற சடங்குகள் மூலம் குலதெய்வத்தின் ஆசி பெறப்படுகிறது. இது நம்முடைய பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகவும் இருக்கிறது.

Read More : உலகில் அதிக வைரங்களைக் கொண்ட நாடு எது?. டாப் 10 நாடுகள் இதுதான்!.

CHELLA

Next Post

அலர்ட்..! தமிழகத்தில் பருவமழை... மின் வாரிய அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

Tue Sep 16 , 2025
தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கையாக மின்சார தளவாடப் பொருட்களை போதிய அளவில் இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் மற்றும் துணை நிறுவனங்கள் இடையிலான உயர்நிலை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அவர்; பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து வட்டங்களிலும் தேவையான தளவாடப் பொருட்களை […]
rain Eb 2025

You May Like