வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. இதனால் அணைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் ஆங்காங்கே திறந்துவிடப்பட்டு வருகிறது..
அதன்படி சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 22-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.. ஆனால் தனக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை காட்டமாக பேசினார்.. அப்போது “ மக்கள் பிரதிநிதிக்கு ஒரு வார்த்தை சொன்னால் கெட்டா போயிடும்.. இந்த துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை.. ஒரு அயோக்கியப் பையன் இந்த துறையில் உட்கார்ந்திருக்கிறான்..” என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “ செல்வப்பெருந்தகை போன்ற அரசியல் தலைவர் இப்படி சொன்னதற்காக நான் வருத்தப்படுகிறேன். உண்மை என்னன்னு தெரிஞ்சு பேசணும்.. பருவமழை முடிந்து அடுத்த பருவமழை தொடங்கும் போது மேட்டூர் அணை நிரம்பியிருந்தால் தான் முதல்வர் வந்து திறப்பார்.. இதுபோன்று ஆற்று குறுக்க கட்டியிருக்கிறதல்லாம் அது போல் பண்ண மாட்டார்கள்.. அங்க ஒருத்தன் இருக்கான், இங்க ஒருத்தன் இருக்கான் என்கிறார்.. நான் சொல்றேன்.. அங்க ஒருத்தன் இருக்கான். அவனால் தான் இந்த தொல்லை.” என்று தெரிவித்திருந்தார்..
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தை “ அவர் பேசுனது தான் எனக்கு வருத்தமா இருக்கு. ஒரு பொறுப்புள்ள அமைச்சர், மூத்த அமைச்சர், மாபெரும் இயக்கத்தின் பொதுச் செயலாளர் இப்படி பேசலாமா? அந்த பகுதியின் இந்தியா கூட்டணியின் தலைவரோடு பேசிக் கொண்டு வரும் போது அதை யாரோ வீடியோ எடுத்து போட்டார்.. அதற்கு நான் பொறுப்பாக முடியாது.. என்னை கேட்டுவிட்டு திறங்கன்னு சொல்லவில்லை.. எனக்கு ஏன் தகவல் சொல்லவில்லை என்று தான் கேட்கிறேன்.. கேட்டதே குற்றம் என்று துரைமுருகன் குற்றம்சாட்டினால் அதற்கு என்ன பதில்.. அப்படி சொல்ல கூட்டாது.. அதிகாரிகளை கேட்பதற்கே அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை எனில் நான் என்ன பண்ண முடியும்?
மக்கள் பிரதிநிதிகளை விட அதிகாரிகள் மேலானவர்களா? கூப்பிடாதன்னு யாரோ அதிகாரிகள் மேல இருந்து சொல்றாங்க. அதிகாரிகள் சொல்றதை இந்த துறை ஏன் கேட்கிறது.. அவர்கள் சொல்வதை சீர் தூக்கி பார்க்கணும்.. அதான் என் வேதனை.. முதல்வருக்கு களங்கம் ஏற்படக் கூடாதுன்னு தான் அமைதியா இருக்கோம்.
2015-ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது திறந்துவிட்டாங்க.. சென்னையே நிரம்பிவிட்டது.. அது மாதிரியான மக்கள் பிரதிநிதிகளை தான் விரும்புறாங்களா அதிகாரிகள்? ஒரு மூத்த அமைச்சர் இதையும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு பேசிய வருத்தமளிக்கிறது..” என்று தெரிவித்தார்..
Read More : அதானிக்கு ரூ.32,000 கோடி பணமா? இல்லவே இல்ல.. வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்திக்கு LIC மறுப்பு!



