ஐபோனை இவ்வளவு குறைந்த விலைக்கு வாங்க முடியுமா..? ரூ.12 ஆயிரம் வரை சலுகை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களது சந்தையை விரிவுபடுத்துவதற்கான வேலையில் தீவிரம் காட்டி வருகிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனங்களின் ப்ராடக்டுகளில் ஐபோனிற்கு என தனியாக சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமான ஐபோன் 14 மஞ்சள் நிற வெர்ஷன் தற்போது ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வந்துள்ளது. விற்பனை விலையை விட கிட்டத்தட்ட 12 ஆயிரம் வரை சலுகை விலையில் வாடிக்கையாளர்களால் ஐபோன் 14 மஞ்சள் நிற வெர்ஷனை வாங்க முடியும்.


முன்னர் ரூ.79,999 என்று இருந்த ஐபோன் 14 மஞ்சள் எடிசனின் 128 ஜிபி மாடலின் விலையானது தற்போது ரூ.71,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நீங்கள் எச்டிஎப்சி வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால் எச்டிஎப்சி கார்டை பயன்படுத்தி மேலும் ரூ.4,000 வரை சலுகை பெற முடியும். இது தவிர 256 ஜிபி மாடலுக்கும் சலுகை கிடைக்கிறது. 77,999 என்ற வழியில் ஐபோன் 14 மஞ்சள் நிற எடிஷன் 256 ஜிபி மாடல் கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டை வைத்திருப்பவர்களுக்கு 5 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுகிறது.

ஐபோனின் மஞ்சள் நிற எடிஷனை விரும்பாதவர்களுக்கு கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் ஊதா என 4 நிறங்களில் வாங்கிக் கொள்ளலாம். இவற்றின் விலையானது 67,999 ஆகும். இதில் சிவப்பு நிற மாடலின் விலையானது 66,999 ஆகும். கடந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் இருந்து ஐபோன் பல்வேறு நிறங்களில் விற்பனைக்கு வர துவங்கியுள்ளது. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் அறிமுகத்திற்கு பின்னர் அதே மாடலில் ஆல்பைன் கிரீன் வெர்ஷன் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாடல் வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையிலும் கூட தற்போது வரை அந்த ஃபோனின் விற்பனை நன்றாக உள்ளதாகவே தெரிவிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் ஐபோனை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயத்தில் பழைய மாடல்களில் வெளிவரும் ஐபோனிலும் வாடிக்கையாளர்கள் விரும்பத் தகுந்த வகையில் பல்வேறு நிறங்களில் அவை கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

CWC பிரபலங்களுடன் லெஜண்ட் சரவணன்..!! புதிய லுக்கை கவனித்தீர்களா..? வைரலாகும் புகைப்படம்..!!

Mon Apr 10 , 2023
தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த 2022இல் வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது முதல் படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சரவணன் இப்போது தனது இரண்டாவது படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் சமீபத்தில் தனது அடுத்த படத்திற்கான தாடி வைத்த புதிய படத்தை இணையத்தில் வெளியிட்டார். தற்போது, ​​இரண்டு பிரபல ‘குக் வித் கோமாளி’ பிரபலங்கள் உடன் […]
Legend Saravanan

You May Like