இன்றைய காலத்தில் அனைவரும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சப்பாத்தியை தினந்தோறும் சாப்பிட்டு வருகின்றனர். முழு கோதுமை கொண்டு தான் சப்பாத்தி மாவு தயாரிக்கப்படுகிறது. இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் குறிப்பாக, உடல் எடையை குறைப்பதற்கு டயட்டில் இருக்கும் நபர்கள், சாதத்திற்கு பதில் சப்பாத்தியை தங்களது தினசரி உணவில் சேர்த்து வருகின்றனர். இருப்பினும், தினந்தோறும் சப்பாத்தியை சாப்பிடுவது நல்லதா அல்லது கெட்டதா என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
சப்பாத்திகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி6, பி9, ஈ, அத்துடன் இரும்பு, தாமிரம், மாங்கனீசு, சிலிக்கான், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், அயோடின், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான தினசரி ஊட்டச்சத்துக்களை சிறிய அளவில் வழங்க உதவுகின்றன. கூடுதலாக, அவற்றில் உள்ள இரும்புச் சத்து இரத்த சோகையைத் தடுக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தைப் பேணுவதில் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதிக நார்ச்சத்து: செரிமானம் மேம்பட உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தருகிறது.
இரத்த சர்க்கரை அளவுகள்: சப்பாத்தியின் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. NCBI இதழில் வெளியிடப்பட்ட 2020 ஆய்வில், சப்பாத்திகள் சாப்பிடுவது இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சரும ஆரோக்கியம்: சப்பாத்திகளில் உள்ள பி வைட்டமின்கள், துத்தநாகம் மற்றும் பிற தாதுக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. சப்பாத்தி சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
NCBI இதழில் 2016 இல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, சப்பாத்தி தயாரிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே:
எண்ணெயைத் தவிர்க்கவும்: அதிக எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சப்பாத்தி செய்வது உடலில் தேவையற்ற கொழுப்பு சேர வழிவகுக்கும். எனவே, முடிந்தவரை குறைந்த நெய் அல்லது எண்ணெயைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. உண்மையில், மாவை கலக்கும்போது அல்லது சப்பாத்திகளை சுடும்போது எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பக்க உணவுகளில் கவனமாக இருங்கள்: சந்தையில் நாம் வாங்கும் மாவில் மைதா இருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, வீட்டில் கோதுமை மாவைப் பயன்படுத்துவது நல்லது. மேலும், பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு கறியை விட, சப்பாத்திக்கு பக்க உணவாக அனைத்து வகையான காய்கறிகளையும் சேர்த்து தயாரிக்கப்பட்ட கூர்மாவைச் செய்வது நல்லது.
காய்கறிகள் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அளிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சப்பாத்திக்கு மாவை பிசையும்போது, கேரட், பீட்ரூட் அல்லது கீரை போன்ற சில காய்கறிகளை மாவுடன் சேர்த்து, பின்னர் சப்பாத்தி செய்து சாப்பிடுவது நல்லது.
மைதா இல்லாமல்: கோதுமை மாவுடன் கூடுதலாக, நீங்கள் சோயாபீன் மாவு, சிறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மாவு அல்லது சந்தையில் கிடைக்கும் மல்டிகிரைன் மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இருப்பினும், மைதா 0% ஆக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.
நிபுணர்கள் சொல்வது என்ன? சப்பாத்தி மாவு கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மாவில் நார்ச்சத்து உள்ளது. இந்த உள்ளடக்கம் கொழுப்பைக் கரைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் சப்பாத்தி என்று வரும்போது, சிலர் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இப்படி செய்தால் உடல் எடை குறையும் என்று நினைத்தால் அது சரியல்ல என்கின்றனர் சுகாதார வல்லுநர்கள்.
அளவுக்கு அதிகமாக சப்பாத்தி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சப்பாத்தி சாப்பிடுபவர்கள் எண்ணெய் சேர்க்காமல் இரண்டு சாப்பிடலாம். இது 140 கலோரிகளை வழங்குகிறது. அவ்வாறு செய்வதால் எடை குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Read more: Flash: TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு..!