சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் பொக்கிஷமாக விளங்கும் நெய், உள் உறுப்புகளுக்கு மட்டுமின்றி, சரும பராமரிப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிப்பதால் எடை குறைவதுடன், உடலில் உள்ள நச்சுகள் நீங்கும்.
மேலும், இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைத்து, நாள் முழுவதும் ஆற்றலை வழங்குகிறது. இது ஒருபுறம் இருக்க, நெய்யை சமையலைத் தாண்டி சருமத்திற்கு பயன்படுத்தும் பாரம்பரிய முறை ஒன்று ஆயுர்வேதத்தில் உள்ளது.
அதிலும் குறிப்பாக, இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் நெய் கொண்டு மசாஜ் செய்வது பல நன்மைகளைத் தருவதாகக் கூறப்படுகிறது. இந்த வகை பாத மசாஜ் இந்திய மருத்துவப் பாரம்பரியத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. உள்ளங்கால்களில் நெய் தடவி மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம் நரம்புகள் பலப்படுத்தப்படுகின்றன.
ஏனென்றால், நம் உடலின் அனைத்து நரம்புகளின் முனைகளும் பாதங்களின் அடிப்பகுதியில் இணைந்திருக்கின்றன. இந்த மசாஜ் கால்களில் ஏற்படும் வலி, குடைச்சல் மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது. இது மட்டுமின்றி, நெய் மசாஜ் ஆழ்ந்த மற்றும் தரமான தூக்கத்தைப் பெற பெரிதும் உதவுவதால், மறுநாள் காலையில் முகம் இயற்கையான பளபளப்பைப் பெறும்.
அத்துடன், செரிமான கோளாறுகள், அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளுக்கும் இது நன்மை தரும். எனவே, ஒவ்வொரு இரவும் ஒரு பாத்திரத்தில் நெய்யை எடுத்து, உள்ளங்கால்கள் சூடாகும் வரை மெதுவாக மசாஜ் செய்துவிட்டு உறங்கச் செல்வது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு எளிய பழக்கமாகும். நெய் பிடிக்காதவர்கள், தேங்காய் எண்ணெய்யை இதற்கு பயன்படுத்தலாம்.
Read More : நீங்கள் மின்னல் தாக்கும் இடத்தில் இருக்கீங்களா..? உங்கள் உயிரை பாதுகாப்பது எப்படி..?



