இந்து மதப் பண்டிகைகளில் மிகவும் கோலாகலமாக, கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத அமாவாசை நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வருகிறது. தீபாவளியின்போது மக்கள் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை மகிழ்விக்கப் பல்வேறு சடங்குகளைச் செய்வார்கள். இதன் மூலம் லட்சுமியின் நேரடி அருளைப் பெற்று, ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
தங்கத்திற்குப் பதிலாக வேறு என்ன வாங்கலாம்..?
தற்போது தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வருவதால், அதிக செலவில்லாமல் தங்கத்திற்குப் பதிலாக எதை வாங்கலாம் என்று பலரும் யோசிக்கின்றனர். அத்தகையவர்களுக்கு ஒரு எளிய மங்களகரமான தீர்வு உள்ளது.
கொத்தமல்லி விதைகள் : தந்தேரஸ் அன்று கொத்தமல்லி விதைகளை வாங்குவது இந்தியக் கலாச்சாரத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது வெறும் சமையல் மசாலாப் பொருள் மட்டுமல்ல, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
கொத்தமல்லி விதையின் மகிமை : தந்தேரஸ் அன்று கொத்தமல்லி விதைகளை வாங்கும் மக்கள், அதைத் தீபாவளிக்குப் பிறகு வரும் கோவர்தன் பூஜை அல்லது பாயிபிஷு பூஜையின்போது நிலத்தில் விதைக்கின்றனர். இந்தக் கொத்தமல்லி விதைகள் முளைத்து வளரும்போது, அது குடும்பத்தில் செழிப்பும் மகிழ்ச்சியும் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதற்கான இயற்கையான அறிகுறியாக நம்பப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் செல்வமும் செழிப்பும் நிரந்தரமாக இருக்கும் என்று நம்பிக்கை நிலவுகிறது.
குறிப்பாக, தொழிலதிபர்கள் இந்த நாளில் தங்கள் புதிய கணக்குப் பரிவர்த்தனைகளைத் தொடங்குவதற்கு ஒரு நல்ல தொடக்கமாகவும், புதிய கணக்கு தொடங்குவதற்கு ஒரு நல்ல சகுனமாகவும் கொத்தமல்லி விதைகளை வாங்கிக் குவித்து வைப்பார்கள். எனவே, அதிக விலைக்குத் தங்கம் வாங்க முடியாதவர்கள், மங்களகரமான கொத்தமல்லி விதைகளை வாங்கி, தங்கள் வீட்டுச் செழிப்பை அதிகரிக்க செய்யலாம்.



