உலகம் முழுவதுமே உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், ஜப்பான் போன்ற சில நாடுகளில் மக்கள் பெரும்பாலும் ஒல்லியாகவே இருப்பது ஏன் தெரியுமா..? ஜப்பானியர்கள் மிகக் குறைவாகவே உடல் பருமனுடன் இருப்பார்கள். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் தான்.
ஜப்பானிய சமையலில் பெரும்பாலும் அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக வேகவைத்த காய்கறிகள், கடல்நீர் மீன்கள், வெண்மையான அரிசி, மிசோ சூப் போன்ற சத்து நிரம்பிய உணவுகள் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இவர்களின் உணவில் நிறைய அளவில் பால் மற்றும் பால் சார்ந்த உனவுகள், பெரியளவில் இறைச்சி ஆகியவை சேர்க்கப்படுவதில்லை என்பதும் முக்கிய காரணமாகும்.
மேலும், ஜப்பானியர்கள் சாப்பிடும் உணவின் அளவிலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்கள். உணவுகளை அடைத்து சாப்பிடும் பழக்கம் இல்லை. சிறிய சிறிய பவுட்களில் உணவுகளை பரிமாறுவதால், அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்பே இல்லை. உணவுடன் கூடிய உடல் இயக்கமும் மிக முக்கியம். பொதுவாக ஜப்பானியர்கள் நடைபயிற்சி, சைக்கிள் பயணம் மற்றும் பஸ்ஸை தவிர்த்து நடக்கும்படியாக வாழும் கலாசாரத்தில் பழகியவர்கள்.
நகரங்களில் கூட, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகத்துக்குச் செல்லும் பெரியவர்கள் வரை நிறைய பேர் நடக்கவே பெரிதும் விருப்பம் காட்டுகிறார்கள். அத்துடன், ஜப்பானியர்களின் கலாசாரம் மற்றும் கல்வி முறைகளும் சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க தூண்டுவதால், குறைந்த பருமனுடன் இருக்கின்றனர்.
எடை அதிகரிப்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனை மட்டும் அல்லாமல், சமூக ரீதியாகக் கூட கவனிக்கப்படுகின்றது என்பதாலே, ஒல்லி உடல் அமைப்பை அவர்களே பராமரிக்க முயற்சிக்கின்றனர். இந்த எல்லா காரணிகளும் சேர்ந்தே, ஜப்பானியர்கள் சராசரியாக சீரான எடையுடனும், உடல் நலத்துடனும் வாழக் காரணமாகின்றன. உணவு முறையை மட்டுமே சீர்செய்தாலும், அவர்கள் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் அனைவரும் பின்பற்ற முடியும்.
Read More : ரெடிமேட் ஆடை உற்பத்தி ஆலை..!! ரூ.3 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..?



