பலர் உடல் எடையை குறைக்க பல கடுமையான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், தினசரி எளிதாக செய்யக்கூடிய நடைப்பயிற்சி, எடை குறைப்பிலும், உடல் ஆரோக்கியத்திலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நடைப்பயிற்சி இதயத்தை வலுவாக வைத்திருக்கும் மற்றும் உடல் முழுவதும் இரத்தச் சுழற்சியை மேம்படுத்தும். இருப்பினும், பலர் தினமும் நடந்தாலும் எடை குறையவில்லை என்று கவலைப்படுகிறார்கள். இதற்கான காரணம், வெறும் நடைப்பயிற்சி மட்டும் போதாது; அதோடு உணவு முறையிலும் சில மாற்றங்களைச் செய்வது அவசியம்.
நடைப்பயிற்சிக்கு அடிப்படை விதிகள்: எடையை குறைக்க, தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். ஆரம்பத்தில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி கடினமாக தோன்றினால், காலை 15 நிமிடம் மற்றும் மாலை 15 நிமிடம் எனப் பிரித்து நடக்கலாம். நடைப்பயிற்சிக்கு புதியவர்கள், ஆரம்பத்தில் குறைந்த நேரத்திலிருந்து துவங்கி, மெதுவாக நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
உணவு முறையில் மாற்றங்கள்: எடை குறைப்பில் வெறும் நடைப்பயிற்சியால் மட்டும் போதாது; உணவுமுறை மிக முக்கியம். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். இது தசைகளை வலுவாக்கி வயிற்றை நிரப்ப உதவும்.
மாலை 7 மணிக்கு முன்பு சாப்பிடுவது நல்லது.
தண்ணீர் அருந்துதல்: தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும், உடல் நீர் சமநிலை உறுதியாகவும் இருக்கும்.
எடைகளை தூக்கும் பயிற்சி: நடைப்பயிற்சியுடன் சேர்த்து எடைகளை தூக்கும் பயிற்சிகள் செய்யவேண்டும். எடைகளை தூக்கும் போது தசைகள் வலுவடையும் மற்றும் எடை குறைப்பில் உதவும். வீட்டில் எடைகள் இல்லாவிடில், பாட்டில்கள் அல்லது நீர் பாட்டில்களை எடையாக பயன்படுத்தி செய்யலாம்.
மேலும் கவனிக்க வேண்டியவை: வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். உணவு, நீர் அருந்துதல், நடைப்பயிற்சி மற்றும் எடையை தூக்கும் பயிற்சிகளை ஒருங்கிணைத்து செய்யவேண்டும். இந்த முறைகள் தொடர்ச்சியாக பின்பற்றினால், எடை குறையும் மட்டுமல்லாது, உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும்.



