Liverpool premier league: லிவர்பூல் நகரில் நடந்த பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்ட அணிவகுப்பின் போது ரசிகள் கூட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் 50 பேர் காயம் அடைந்தனர்.
இங்கிலாந்தில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நடந்தது. இதில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இந்த அணியினர் லிவர்பூல் நகரில் வெற்றி அணிவகுப்பு நடந்தினர். இந்த கூட்டத்திற்குள் ஒரு கார் மோதியதில் 27 பேர் காயம் அடைந்தனர். இதில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 53 வயது பிரிட்டிஷ் நபர் கைது செய்யப்பட்டனர். இதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கார் நின்றதும் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஜன்னல்களை உடைத்தனர். கார் டிரைவரை மக்கள் தாக்க முயற்சி செய்த போது போலீசார் தடுத்து நிறுத்தனர். மெர்சிசைடு காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல. இந்த வழக்கு குறித்து கான்ஸ்டபிள் ஜென்னி சிம்ஸ் கூறுகையில், “இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகத் தெரிகிறது, இது தொடர்பாக வேறு யாரையும் நாங்கள் தேடவில்லை.” இது பயங்கரவாதமாக பார்க்கப்படவில்லை. இந்த வழக்கு சாலை விபத்து தொடர்பானது என்று போலீசார் மேலும் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தேவையான ஆதாரங்களை சேகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் பயங்கரமானது என பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து பிரதமர் ஸ்டாமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: லிவர்பூலில் நடந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. காயமடைந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆதரவாக இருப்போம். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கு விரைவாகவும், தொடர்ந்தும் செயல்பட்ட போலீசார் அவசர சேவைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.