ஷர்மிளாவுக்கு கமல் கொடுத்த கார்..!! விலை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா..?

கோவையின் முதல் தனியார் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா இணையதளத்தின் மூலம் கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பிரபலமானார். அவரை பாராட்டவும், ஊக்கமளிக்கவும் பிரபலங்கள் பலரும் அவ்வபோது ஷர்மிளா பணியாற்றும் பேருந்தில் பயணம் செய்து அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் இவரது பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.


அப்போது பணியில் இருந்த பயிற்சி பெண் நடத்துநருக்கும், ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பணியை இழந்த ஷர்மிளா இனி வரும் காலத்தில் கார் அல்லது ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக் கொள்வேன் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவிற்கு சொந்தமாக தொழில் செய்வதற்காக மாருதி சுஸூகி நிறுவனத்தின் எர்டிகா காரை பரிசாக அளித்திருந்தார்.

மேலும், இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் பரிசாக வழங்கிய காரின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்தக் காரைப் பொறுத்தவரை பெட்ரோல் வேரியன்ட் ரூ 9.75 லட்சம் என்ற விலையிலும், சிஎன்ஜி வேரியண்ட் ரூ.10.70 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு ரூ.10 லட்சம் விலையிலான காரை பரிசாக கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

CHELLA

Next Post

48 வயதில் கர்ப்பம்..!! நாசமாக்கியது கவுண்டமணி தான்..!! வேதனையுடன் பகிர்ந்த ஷர்மிலி..!!

Tue Jun 27 , 2023
தமிழ் சினிமாவில் 90-களில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 90’ஸ் குழந்தைகளுக்கு இவரை நன்றாகவே தெரிந்திருக்கும். நடிகையாவதற்கு முன்னர் இவர் க்ரூப் டான்ஸராகவும் இருந்தார். அதுமட்டுமின்றி, ‘ராக்காயி கோயிலிலே’ படத்தில் வரும் இவரின் லாட்டரி சீட்டு காமெடியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படத்தில் இவர் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்னர் அவருடன் இணைந்து […]
48 வயதில் கர்ப்பம்..!! நாசமாக்கியது கவுண்டமணி தான்..!! வேதனையுடன் பகிர்ந்த ஷர்மிலி..!!

You May Like