பாமக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இரு தரப்பும் நீதிபதி அறைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாமக நிறுனரான ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார போட்டி தீவிரமடைந்துள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தான் தான் பாமகவின் தலைவர் என அறிவித்தார். ஆனால் அன்புமணியோ பாமக தலைவராக தான் நீடிப்பதாகவும் பொதுக்குழுவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இருவரும் மாறி மாறி கட்சி தலைவர்களை நியமித்தும் நீக்கியும் வருகின்றனர்..
இந்த நிலையில் அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பை சேர்ந்த முரளி சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. மேலும் அந்த மனுவில் “ கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பாமக தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28-ம் தேதி உடன் நிறைவடைந்துவிட்டது.. புதிய தலைவராக கட்சி நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மே 30 முதல் அவர் தலைவராக செயல்பட்டு வருகிறார்..
கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும், நிர்வாக பொறுப்புகளும் கட்சியின் நிறுவன தலைவருக்கே வழங்கி கடந்த ஜூலை 7-ம் தேதி நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரமும் அவருக்கே உள்ளது..
கட்சி நிறுவனரின் அனுமதி இல்லாமல், ஆகஸ்ட் 9ம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த உள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.. எனவே அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது இரு தரப்பும் நீதிபதி அறைக்கு வர உத்தரவிடப்பட்டது.. ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இன்று மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.. இரு தரப்புக்கும் இடையே சமசர பேச்சுவார்த்தையை நீதிபதி நடத்துவார் என்றும் கூறப்படுகிறது..
Read More : Breaking : 11-ம் பொதுத்தேர்வு ரத்து.. 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்.. மாநில கல்விக் கொள்கை..