தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கியது.. ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் SIR பணிகள் அவசர கதியில் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது.. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி SIR க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார்.. மேலும் SIR-க்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன..
SIR தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலமான, கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் காலத்தில் தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக, விவசாயிகளாக இருப்பதால், Enumeration Form-களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன..
இதனிடையே SIR-க்கு தடை விதிக்கக்கோரி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.. இந்த நிலையில் இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழக அரசு தரப்பு “ தமிழ்நாட்டில் தற்போது பருவமழை காலம் என்பதால் இந்த சமயந்த்தில் SIR நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.. வருவாய் மற்றும் பிற மாநில அதிகாரிகள் பருவமழை, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுவார்கள்.. ஜனவரியில் அறுவடை, பொங்கல் போன்ற பண்டிகை கொண்டாட்டம் இருக்கும் போது SIR பணிகள் மேற்கொள்ள முடியாது..” என்று வாதிட்டது..
இதை தொடர்ந்து SIRக்கு எதிரான மனுக்களுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.. SIR-க்கு எதிரான அனைத்து மனுக்களின் நகல்களையும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வழக்கறிஞருக்கு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது..



