ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான சேவைகளை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.. அதன்படி, இனி ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இனி மருத்துவச் சான்றிதழை வழங்க வேண்டியதில்லை; மேலும் போக்குவரத்து மீறல்களுக்கு ஓட்டுநர் உரிமங்களில் அபராதப் புள்ளிகள் பதிவு செய்யப்படும், மேலும் காப்பீட்டு பிரீமியங்களுடனும் இணைக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ​​இந்த இரண்டு மாற்றங்களும் மத்திய அரசால் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த […]

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சாலா (33) எனும் இரு குழந்தைகளின் தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பிள்ளையை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவருக்கும் சாலாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் […]

ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல்களை ரஷ்யா ‘முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று கண்டித்துள்ளது. ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களை, “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பகுதியிலும் உலக அளவிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. ஈரானில் தற்போது நடந்து வரும் […]

தமிழக பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (MNS) தலைவர் ராஜ் தாக்கரே வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அண்ணாமலை மும்பையில் கால் வைத்தால் அவரது கால்களை வெட்டுவேன்” என ராஜ் தாக்கரே பேசியிருப்பது அநாகரிகமான அரசியல் மட்டுமின்றி, ஜனநாயக விழுமியங்களுக்கே எதிரானது என சீமான் தனது அறிக்கையில் சாடியுள்ளார். மகாராஷ்டிர மண்ணின் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான காய்நகர்த்தல்கள் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. அதிமுக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் நீடிக்கும் ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், தங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளது. கடந்த கால தேர்தல்களில் பெற்ற வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டு, இந்த எண்ணிக்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்பதில் […]

தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் எட்டாக்கனியாக இருந்துவிடக் கூடாது என்ற நோக்கில், ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்’ மிகச்சிறந்த பாதுகாப்புக் கவசமாக செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் இம்மாபெரும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வழங்குகிறது. அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகளைக் கட்டணமில்லாமல் பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. பச்சிளங்குழந்தைகளுக்கான பராமரிப்பு சிகிச்சைகள் தொடங்கி, […]

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற உன்னத தத்துவத்தைக் கொண்ட போகிப் பண்டிகை, சென்னையில் இன்று ஒரு சூழலியல் பேரழிவாக மாறியுள்ளது. பிளாஸ்டிக், டயர்கள் மற்றும் ரசாயனப் பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என பலகட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், இன்று அதிகாலை முதல் சென்னை மாநகர் முழுவதும் கடும் புகை மூட்டத்தில் சிக்கி தவிக்கிறது. இந்த மோசமான சூழலால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் சுவாசப் […]

இந்திய ரயில்வே தனது டிஜிட்டல் சேவைகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, ரெயில் ஒன் (Rail One) எனும் ஒருங்கிணைந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட்கள் முதல் முன்பதிவில்லாத டிக்கெட்கள், பிளாட்பார்ம் டிக்கெட்கள், பிஎன்ஆர் நிலவரம் மற்றும் ரயில்களின் தற்போதைய இருப்பிடம் என அனைத்துத் தகவல்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதே இச்செயலியின் சிறப்பம்சமாகும். இதுவரை ஐஆர்சிடிசி (IRCTC) மற்றும் யுடிஎஸ் (UTS) என தனித்தனி […]

தமிழகத்தில் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தி, அவர்களை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு அதிரடித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்துப் பயணம் மற்றும் தோழி விடுதிகள் போன்ற திட்டங்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது விளிம்புநிலை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மற்றுமொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு […]