பிரபல நடிகையை மொபைல் ஷோரும் ஊழியர்கள், கையை பிடித்து இழுத்து ஷோருமின் ஷட்டரை மூடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அன்னா ரேஷ்மா ராஜன், தனது அம்மாவின் செல்போனில் உள்ள சிம்கார்ட்டில் பிரச்சனை ஏற்பட்டதால், வேறு சிம் கார்டு வாங்குவதற்காக ஆலுவா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஷோரூமுக்கு சென்றுள்ளார். மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து, தலையை துப்பட்டாவால் மூடிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். […]

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த போண்டா மணியை ஏமாற்றி ரூ.1 லட்சம் பணத்தை சுருட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ் திரைப்படங்களில் பல்வேறு காமெடி கதாபாத்திரத்தில் நடித்த போண்டாமணி என அழைக்கப்படும் கோடீஸ்வரன், சென்னை ஐயப்பன் தாங்கலில் வசித்து வருகிறார். கடந்த வாரம் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் […]

சூர்யாவின் ‘வணங்கான்’ கிடப்பில் போடப்படவில்லை என்றும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று நடிகர் ஷீகான் ஹூசைனி தெரிவித்துள்ளார். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். சூர்யாவை வைத்து ‘பிதாமகன்’, ‘நந்தா’ ஆகிய படங்களை இயக்கியவர் பாலா. இந்நிலையில், சூர்யா-பாலா கூட்டணியின் படத்திற்கு ’வணங்கான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி […]

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாஸ்ரீயை திருமணம் செய்து கொண்டதை மறைக்கும் விதமாக அதனை விளம்பர படப்பிடிப்பு என்று இன்ஸ்டாகிராமில்  பதிவிடச்சொல்லி காதல் மனைவியை செல்லம்மா சீரியல் நாயகன் அர்னவ்  நிர்பந்திக்கும் ஆடியோ வெளியாகி உள்ளது. செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாஸ்ரீ-யை காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டு கர்ப்பிணியானதும் ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்தான், செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் என்கிற நைனாமுகமது. நடிகை திவ்யஸ்ரீயிடம் வாக்குமூலம் பெற்று, கீழ்ப்பாக்கம் […]

தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் சேர்ந்து வாழவுள்ள நிலையில், தனுஷிடம் ஐஸ்வர்யா செல்போனில் மனம்விட்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுஷுக்கும் யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இரு குடும்பத்தாரும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முற்றியதால், கடந்த ஜனவரி மாதம் […]

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 67’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 20ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை படம்பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜயின் பெயர் ராஜேந்திரன் […]

அமெரிக்க வாழ் மலையாள குடும்பத்தில் பிறந்து ’ஸ்வப்னா சஞ்சரி’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த 2016இல் தன்னுடைய 19-வது வயதில் மஜ்னு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அனு இம்மானுவேல். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் உருவான ’துப்பறிவாளன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார். இப்படத்திற்கு பிறகு தெலுங்கு படவாய்ப்புகள் வர, அக்கடதேசம் சென்று அதன்பின் ’நம்ம […]

பாலிவுட்டில் பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தவரும், தமிழில் கமலின் ’ஹே ராம்’ படத்தில் பணியாற்றியவருமான நடிகர் அருண் பாலி காலமானார். அவருக்கு வயது 79. பழம்பெரும் பாலிவுட் நடிகரான அருண் பாலி Myasthenia Gravis என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது நரம்புகள் மற்றும் தசைகளுக்கு இடையேயான தொடர்பு செயலிழப்பால் ஏற்படும் ஒரு நோயாகும். இதற்காக அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை […]

பயில்வான் ரங்கநாதன் குறித்து பிரபல காமெடி நடிகர் டெலிஃபோன் ராஜ் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். சினிமாத் துறையை சார்ந்த நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை, படங்களில் நடிப்பது பற்றி அவதூறாக பேசி அசிங்கப்படுத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். ஒரு பத்திரிகையாளராகவும், நடிகராகவும் இருந்துள்ள பயில்வான், இப்படி கேவலமாக நடந்து கொண்டதை பலரும் கண்டித்து புகாரும் அளித்து வந்தனர். அதை மீறியும் பயில்வான் ரங்கநாதன் கடும் விவாதங்களையும், கருத்துக்களையும் கூறி […]

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க சீமான் முடிவு எடுத்துள்ள நிலையில், இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க சீமான் முடிவு எடுத்துள்ளார். இந்த வரலாற்று திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார் எனும் அதிகாரபூர்வமான தகவலை சீமான் தனது ட்விட்டர் பக்கம் மூலம் […]