fbpx

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ”தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11ஆம் நாளை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகையால் அன்றைய நாள், பள்ளி கல்லூரிகளில் இதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், போதையின் தீமைகள் குறித்த காணொளிக் காட்சிகள் …

இனியாவது தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு வீணாக கடலில்
கலந்து கொண்டு வரும் உபரிநீரை விவசாயிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். …

எடுத்தேன் கவிழ்த்தேன் என மத்திய அரசு செயல்படுவதாக எம்.பி. திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பாஜக அரசு மாநில அரசுகளை நசுக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவித முனைப்பையும் அவர்கள் காட்டவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும், வீட்டுக்கு …

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்திடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பொறியாளர்கள்
நியமிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் …

அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் தரப்பு அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது. 

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி …

சீரான மின் விநியோகம் வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சீரான மின் விநியோகம் வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கனமழையால், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் …

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு இலங்கையில் இருந்து சிங்களர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த சிங்களர் எழுதிய கடிதத்தில், “சபரகமுவா மாநிலத்தின் கேகாலை சேர்ந்த 63 வயது சிங்களரான நான் புத்த மதத்தை பின்பற்றுபவன். இந்த கடினமான சூழலில் அரிசி வழங்கியதற்கு உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதய நோயாளிகளான நானும், என் மனைவியும் …

இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடை செய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட …

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு அட்டையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு அட்டை..! காப்பகத்திற்கு ரூ.40 கோடி..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பின்னர் அவர் …

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருந்தாலும் அந்த அணையின் பராமரிப்பு உள்ளிட்டவை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையிலிருந்து …