fbpx

தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

வேலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வேலூரில் அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அதே கட்சியை சேர்ந்தவருக்கு …

ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுவதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், ”அரசியல் என்பது ஒரு வாழ்வியல், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்பொழுது சொல்கிறார்களோ, அப்பொழுது தான் நாடு உருப்படும். …

சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற நேரத்தில், இந்தியாவில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தான் ஏற்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜகவிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க இந்த நேரத்தில் அனைவரும் ஒருமித்த உணர்வுடன் ஒன்றுபட வேண்டும். பாஜகவின் தவறான …

சட்டத்தை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் காணொலி மூலம் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ”மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது …

தேநீர் விருந்து தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி மாளிகை மற்றும் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடத்தப்படுவது வழக்கம். இந்த தேநீர் விருந்து தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “தேநீர் …

44-வது செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதை பாராட்டிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விருந்தோம்பல் மற்றும் சுயமரியாதை ஆகியவை தமிழர்களின் பிரிக்க முடியாத குணாதிசயங்கள். செஸ் ஒலிம்பியாட் போன்று உலகளாவிய நிகழ்வுகளை நடத்த எதிர்காலத்தில் தமிழகத்திற்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை …

மாநில உரிமையைப் பறிக்கும் மின்சார சட்டத்திருத்தம் 2022ஐ ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மின்சார சட்டத் திருத்த வரைவு – 2022ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்வது இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினுடைய எதேச்சதிகாரப்போக்கின் …

பிளவுகளை கடந்து அதிமுக ஒன்றிணையும் என்று சசிகலா கூறியுள்ள நிலையில், இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ‘அதற்கு வாய்ப்பே இல்லை, வாய்ப்பில்லை ராஜா… வாய்ப்பில்ல’ என்றார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம். ஆனால், இவர்களை எங்கள் கட்சியில் சேர்ப்பது, நடக்கவே நடக்காது என்றார். உலகிலேயே …

2024-க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார் எனக்கூறியுள்ள நிதிஷ் குமார், பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பீகாரில் பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 8-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். …

கனியாமூர் வன்முறையில் தொடர்பில்லாதவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை திருமாவளவன், “கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தற்கொலையா? கொலையா? என்பதை காட்டிலும் பள்ளியில் நடந்த வன்முறை எப்படி நடந்தது என முற்றிலும் மாறி போய் உள்ளது. அந்த மாணவி இறப்பு எப்படி …