திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தின் பசும் பண்ணையில், பசுக்களோடு பேசிக்கொண்டு இயற்கையை வாழ்வாக மாற்றியுள்ளார் ஒரு விவசாயி. அவர் தான் குணா. பசு வளர்ப்பை பழமையான தொழில் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், இது ஒரு வசதியான தொழில்முறை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
முன்பு, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த குணா, கொரோனா ஊரடங்கின் போது மீண்டும் தனது கிராமத்திற்கே திரும்பினார். வேலை இழப்பு, வருமான சிக்கல் என அனைத்தும் அவரை நெருக்கடிக்குள்ளாக்கியது. அப்போது தான் மாட்டுப் பண்ணை வைக்கும் யோசனை அவருக்கு வந்தது. “வெறும் பசு வளர்ப்பல்ல, ஒரு திட்டமிட்ட தொழிலாக இதைப் பார்ப்பது எப்படி?” என்ற கேள்வி அவரை சிந்திக்க வைத்தது.
அந்த சிந்தனையைச் செயல்படுத்த, ஆரம்பத்தில் ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தார். 5 பசுக்கள், ஒரு சிம்பிள் ஷெட் வைத்து தொடங்கினார். இன்று 30-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வைத்திருக்கிறார். அதன் மூலம் தினமும் கிட்டத்தட்ட 300 லிட்டருக்கு மேல் பால் கறந்து வருகிறார். இவர், தினசரி பால் விற்பனை மூலம் மாதம் ரூ.2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்.
வாட்ஸ் அப் மூலம் கஸ்டமர் ஆடர்களை வாங்கி, subscription மாதிரியில் தினசரி வீடுகளுக்கு பால் விநியோகம் செய்து வருகிறார். தனது பண்ணையை ஒரு multi-income model ஆக வடிவமைத்துள்ள குணா, பசு சாணத்திலிருந்து உரம், பசு சிறுநீரிலிருந்து பசுமை கீறுகள் (bio-pesticide) தயாரிக்கிறார். இவை விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இப்போது அவர் பண்ணையில் சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிரூட்டும் பொறிகள், ஜெர்மன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பால் சேமிப்பு யூனிட் உள்ளிட்டவையும் உள்ளன. தொழில்நுட்பம் இல்லாமல் விவசாயம் இன்று வெற்றி பெற முடியாது என்கிறார். மேலும், இது வெறும் தொழில் அல்ல. ஒரு வாழ்வியல். அதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
Read More : “எவன் கூட பேசிட்டு இருக்க”..? மணிக்கணக்கில் பேசிய மனைவியை கதிகலங்க வைத்த கணவன்..!!