ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து திடீரென பிரேக் அடித்ததால், படிக்கட்டுக்கு அருகே அமர்ந்திருந்த பெண்ணின் ஒரு வயது குழந்தை பறந்து வெளியே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார், தனது சகோதரி மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்திருந்தார். பேருந்து மீனாட்சிபுரம் சிக்னல் அருகே வந்தபோது, ஓட்டுநர் திடீரென கடுமையான பிரேக் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மதன்குமார் கையில் வைத்திருந்த குழந்தையுடன் முன்னோக்கி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அவரின் சகோதரி கையில் வைத்திருந்த குழந்தை படிக்கட்டில் உருண்டு சாலையில் விழுந்தது. சம்பவத்தில் இரண்டு குழந்தைகளும் லேசான காயங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் முழுவதும் பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குழந்தை பேருந்து படிக்கட்டில் உருண்டு, பின்னர் தரையிலும் சாலையிலும் பறந்து விழும் திகிலூட்டும் காட்சிகள் பொதுமக்கள் மனதை நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளன. ஓட்டுநரின் பாதுகாப்பற்ற அலட்சியமே இந்த சம்பவத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
Read more: “வயிறு வலிக்குது அம்மா.. என்னை கொன்னுடுவாங்க..” தாய்க்கு கர்ப்பிணி பெண் அனுப்பிய கடைசி மெசெஜ்..!!