ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கார்த்திகை தீபம்’. நேற்றைய எபிசோடில் நிலத்தில் சாமி சிலை கிடைத்ததால் அது நல்ல இடம் தான் என்று கார்த்தி அனைவரையும் நம்ப வைத்தார். இதைத் தொடர்ந்து, இன்று ஒளிபரப்பான எபிசோடில் பரபரப்பான திருப்பம் நிகழ்ந்தது.
ஊர்காரர்கள் சாமுண்டீஸ்வரியை கையெழுத்து போடுமாறு கேட்டபோது, அவளும் ராஜராஜனும் வேறு வழியின்றி கையெழுத்திட்டனர். பின்னர் சாமுண்டீஸ்வரி கிளம்ப தயாரானபோது, ஊர் பெரியவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி, “பரமேஸ்வரி பாட்டியுடன் சேர்ந்து நீங்களும் உங்க கணவரும் இணைந்து டாகுமெண்ட்டை கொடுங்கள், கோவில் திருவிழாவில் உங்களுக்கு முதல் மரியாதையும் கொடுக்கிறோம்” என கூறினர்.
இதை தடுக்க சிவனாண்டி சதி திட்டம் தீட்டுகிறான். இன்னொரு புறம் இளையராஜா வேலை செய்யும் ஹோட்டலுக்கு தீபாவதி வருகிறார். அவர் நீண்ட நாட்களாக அங்கு பணியாற்றுவதை அறிந்த தீபாவதி, கொண்டு வந்த பைலை மறந்து விட்டு செல்கிறாள். அதில் கார்த்தியின் புகைப்படத்தை பார்த்த இளையராஜா குழப்பமடைந்தார்.
தீபாவதியிடம் “நீங்க நல்லா பேசுறீங்க” எனக் கூறி ஒரு செல்பி எடுத்து கார்த்திக்கு அனுப்பிய இளையராஜா, தெரியாமல் பெரிய ரகசியத்தை வெளிக்கொணர்கிறார். அந்தப் புகைப்படத்தை பார்த்த கார்த்தி, அருணை அழைத்து “ஒரு லேடி வந்து போன் சிசிடிவி ஆதாரங்களை கேட்டார்” எனக் கூற, இரண்டும் ஒரே நபர் என தெரிந்து ஷாக் ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Read more: விருச்சிக ராசியில் சூரியன் : பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்! பெரிய ஜாக்பாட்!