#Breaking : விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்.. வரும் 27-ம் தேதி வட சென்னை, திருவள்ளூர் இல்லை.. எங்கு செல்கிறார்?

vijay campaign 1

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.


அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. இந்த நிலையில் தவெகவினருக்கு 20 நிபந்தனைகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.. அதன்படி, புத்தூர் பகுதியில் உள்ள அண்ணா, பெரியார் சிலை தடுப்புகள் மீது ஏறக்கூடாது.. அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது.. பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கு தாங்களே வாகன பார்க்கிங் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்..

தேசிய நெடுஞ்சாலை, மற்ற சாலைகளின் இரு புறங்களிலும் விளம்பர பதாகைகளை வைக்கக் கூடாது.. கையில் கம்பு, குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருக்கக் கூடாது.. பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் தவெகவினரே பொறுப்பேற்க வேண்டும்.. விஜய் பரப்புரை வாகனத்தின் முன்பாகவோ பின்பாகவோ, இரு சக்கர வாகனத்திலோ அல்லது நடந்து செல்லவோ கூடாது.. விஜய் வாகனத்தின் மேல் 5 வாகனங்களுக்கு செல்லக் கூடாது.. என 20 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.. அதே போல் காவல்துறையினரின் இந்த நிபந்தனைகளை தவெக தொண்டர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அக்கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. வரும் 27-ம் தேதி வட சென்னை மற்றும் திருவள்ளூரில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார் விஜய்.. ஆனால் தற்போது அதே தேதி சேலம், நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. நாமக்கல் மற்றும் சேலத்தில் 4 இடங்களில் மக்களை சந்திக்கவும், அதில் 2 இடங்களில் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளது..

டிசம்பர் மாதம் 13-ம் தேதியில் சேலம் நாமக்கலில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்து.. தற்போது முன்னதாகவே அதாவது வரும் 27-ம் தேதியே அங்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.. எனினும் வட சென்னை, திருவள்ளூரில் விஜய் எப்போது சுற்றுப்பயணம் செல்வார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RUPA

Next Post

'இசைக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்காக நினைவுகூரப்படுவார்': ஜுபீன் கார்க்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

Fri Sep 19 , 2025
சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்த பாடகர் ஜூபீன் கார்க்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “பிரபல பாடகர் ஜூபீன் கார்க்கின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்தேன். இசைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் […]
Modi Zubeen Garg

You May Like