உலகளவில் ChatGPT செயலிழப்பு?. AI இன் Chatbot தளத்தை அணுக முடியவில்லை!. பயனர்கள் புகார்!

ChatGPT Down Globally 11zon

உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் OpenAI இன் ChatGPT ஐ அணுகுவதில் சிக்கல்கள் சந்திப்பதாக புகாரளித்து வருகின்றனர். இந்த தளம் உலகளாவிய செயலிழப்பை சந்தித்ததாகவும் இதனா, Sora மற்றும் OpenAI இன் API சேவைகளைப் பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மாதத்தில் இது இரண்டாவது பெரிய செயலிழப்பு ஆகும் . இது தளத்தின் நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.


என்ன நடந்தது?டவுன்டெக்டரின் கூற்றுப்படி, இந்திய நேரப்படி காலை 6:10 மணிக்குப் பிறகு தளம் செயலிழப்பு தொடர்பான செய்திகள் வெளியாகின.ChatGPT ஐ முழுமையாக அணுக முடியவில்லை என்று 88% க்கும் மேற்பட்ட பயனர்கள் புகார்கள் அளித்துள்ளனர். அதாவது, உரையாடலின் நடுவில் வெற்று திரைகள் (Blank Screens), உள்நுழைவு மற்றும் சரிபார்ப்பு ஏற்பட்ட தோல்விகள், டெவலப்பர்கள் API பிழைகள் (API errors), Sora மற்றும் Codex சேவைகளில் தடைகள் மற்றும் செயலிழப்புகள் ஆகியவற்றை பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து OpenAI தனது சேவைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன (“degraded performance”) என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த பிரச்சனையின் காரணங்களை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. தற்போது இதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ காரணமும் (official reason) வெளியிடப்படவில்லை, எனினும், சர்வர் அதிக சுமை (server overload) அல்லது மென்பொருள் பிழைகள் (software bugs) ஆகியவை சாத்தியமான காரணங்களாக கருதப்படுகின்றன.

இந்தியா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள் இந்த சேவை தடையின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சேவை தடை ஒரு பகுதி மட்டும் இல்லாமல், உலகளாவிய அளவில் OpenAI வழங்கும் முக்கிய சேவைகள் அனைத்தையும் பாதித்துள்ளது. இதனால் எக்ஸ் தளத்தில் பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்: ChatGPT உரையாடல் இடையூறு காரணமாக, பயனர்கள் பலர் தங்கள் வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ChatGPT சில நேரங்களில் பதிலைத் துவக்கி பாதியிலேயே நிறுத்திவிடுகிறது மற்றும் மிகவும் தாமதப்படுத்துகிறது. பயனர்கள் பல முறை login செய்யும்படி அவசியம் ஏற்பட்டுள்ளது. இது verification loop என அழைக்கப்படுகிறது. Sora பயன்படுத்தும் பயனர்கள், வீடியோ ஜெனரேஷனில் கடுமையான தாமதங்களை சந்திக்கிறார்கள். இதில் பல ongoing coding tasks முற்றிலும் நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

OpenAI என்ன கூறியது? OpenAI செயலிழப்பை ஒப்புக்கொண்டு, அதிகரித்த பிழைகளைக் குறைக்க தங்கள் குழு செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளது. ஆனால், முழுமையான சேவை மீட்பு எப்போது நடைபெறும் என்பது பற்றி இன்னும் குறிப்பிடவில்லை. மீண்டும் மீண்டும் உள்நுழைய முயற்சிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது பாதுகாப்பு பூட்டுதல்களை (security locks) ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.

Readmore: தவெக 2-வது மாநாடு பூமி பூஜை: ஒரே மேடையில் விநாயகர், மாதா, மெக்கா படங்கள்..!!

KOKILA

Next Post

கோர விபத்து.. அப்பளம் போல் நொறுங்கிய ஜீப்.. குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலே பலி..!!

Wed Jul 16 , 2025
Eight people, including two school children, died on the spot in an accident that resulted in a jeep overturning in a ditch.
uttarakhand

You May Like