ஸ்ரேயா என்ற இளம் பெண் Chat GPT உதவியுடன் தனது தாயைக் காப்பாற்றிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு, அதாவது AI-ன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக ஏதேனும் சந்தேகம் வந்தாலோ அல்லது எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ பலரும் தற்போது உடனடியாக AI சாட்போட்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த நிலையில் ஸ்ரேயா என்ற இளம் பெண் Chat GPT உதவியுடன் தனது தாயைக் காப்பாற்றிய அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
ஸ்ரேயாவின் தாயார் ஒரு வருடமாக கடுமையான இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.. ஹோமியோபதி, ஆயுர்வேதம், அலோபதி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இருந்தபோதிலும், எந்த பலனும் இல்லை. நிலைமை படிப்படியாக மோசமடைந்து வருவதால் மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர். “இது தொடர்ந்தால், அடுத்த ஆறு மாதங்களில் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றும் மருட்துவர்கள் கூறினர்.
தனது தாயின் உடல்நிலை குறித்து மிகவும் கவலைப்பட்ட ஸ்ரேயா, கடைசி முயற்சியாக ChatGPT-யிடம் உதவி கோரினார். தாய் தனது இருமலின் அறிகுறிகளை விவரித்தபோது, சாட்போட் சாத்தியமான காரணங்களின் பட்டியலை வழங்கியது. அவற்றில், ரத்த அழுத்த மருந்துகள் நாள்பட்ட இருமலை ஏற்படுத்தும் என்பது ஸ்ரேயாவின் கவனத்தை ஈர்த்தது.
ரத்த அழுத்த சிகிச்சைக்காக தான் எடுத்துக்கொண்ட மருந்துகள் குறித்து தாய் உடனடியாக மருத்துவரிடம் தெரிவித்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அந்த ஆலோசனை உண்மை என்பதைக் கண்டறிந்து மருந்துகளை மாற்றிக் கொடுத்துள்ளார். சில நாட்களுக்குள், தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
தனது தாயார் குணமடைந்த பிறகு, ஸ்ரேயா தனது அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். “பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகும், AI சாட்போட் வழங்கிய ஆலோசனை என் அம்மாவின் உயிரைக் காப்பாற்றியது,” என்று அவரின் பதிவு வைரலானது. சரியாகப் பயன்படுத்தினால் AI எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..
Read More : விலை ரூ. 55,000 தான்.. ஒரே சார்ஜில் 130 கி.மீ போகலாம்.. லைஸ்னஸ் வேண்டாம்.. சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..