பிரபலமான செயற்கை நுண்ணறிவு தளமான சாட்ஜிபிடி இன்று முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் தவிப்புக்கு உள்ளாகினர். உலகளாவிய அளவில் OpenAI வழங்கும் முக்கிய சேவைகள் அனைத்தையும் பாதித்துள்ளது. இதனால் எக்ஸ் தளத்தில் பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
ChatGPT உரையாடல் இடையூறு காரணமாக, பயனர்கள் பலர் தங்கள் வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ChatGPT சில நேரங்களில் பதிலைத் துவக்கி பாதியிலேயே நிறுத்திவிடுகிறது மற்றும் மிகவும் தாமதப்படுத்துகிறது. பயனர்கள் பல முறை login செய்யும்படி அவசியம் ஏற்பட்டுள்ளது. இது verification loop என அழைக்கப்படுகிறது. Sora பயன்படுத்தும் பயனர்கள், வீடியோ ஜெனரேஷனில் கடுமையான தாமதங்களை சந்திக்கிறார்கள். இதில் பல ongoing coding tasks முற்றிலும் நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சனையை எப்போது சரி செய்வோம் என்று ஓபன் ஏஐ நிறுவனம் இன்னும் கூறவில்லை. திடீரென முடங்கியதற்கான காரணத்தையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஓபன் ஏஐ அறிவிக்கவில்லை. பயனர்கள் சமூக வலைதளங்களில் ஏஐ முடங்கியதாக தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.



