4 நாட்களில் ரூ.2,040 குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..

360 F 612420676 Az3c9EUa7JNa5ShgNII8DGt4XNEOtqv4 1

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து 71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது..

 ஜூன் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.2000 குறைந்தது.

இந்த நிலையில் 4-வது நாளாக சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.55 குறைந்து ரூ.8,985க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.440குறைந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளி விலை ரூ.1 குறைந்து கிராம் ரூ.119-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைந்த டோல் கட்டணத்தில் பயணம்.. முழு விவரம் இதோ..

English Summary

In Chennai, the price of gold has dropped by Rs. 440 per sovereign and is being sold at Rs. 71,440.

RUPA

Next Post

#Flash : அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமல்.. எப்போது முதல்? சூப்பர் அறிவிப்பு..

Sat Jun 28 , 2025
The Water Bell project is set to be implemented in government schools from next week.
dc Cover qi3vmnei3bjkei2sgoaht4aml4 20191115012627.Medi

You May Like