செம.. இன்றும் தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க இதுதான் சரியான நேரம்..

101325 Traditionalgoldjewellery

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71, 880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.

அந்த வகையில் இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.1320 குறைந்தது. ஆனால் நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை..

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.85 குறைந்து ரூ.8,985க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71, 880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : ஜூலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. 12% வரி அடுக்கு நீக்க வாய்ப்பு.. எந்தெந்த பொருட்களின் விலை குறையும்..?

English Summary

In Chennai, the price of gold has dropped by Rs. 680 per sovereign and is being sold at Rs. 71,880.

RUPA

Next Post

விண்வெளி வீரர் நோய்வாய்ப்பட்டால்.. என்ன நடக்கும்..? பூமிக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா..?

Fri Jun 27 , 2025
விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக விண்வெளியை ஆராய்ந்து வருகின்றனர், ஆனால் அது இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. விண்வெளி பற்றிய புதிய கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் நேற்று தங்கள் பணிக்காக விண்வெளிக்குச் சென்றுள்ளனர். இந்த நேரத்தில், விண்வெளி வீரர்களுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் ஒரு கேள்வி என்னவென்றால், விண்வெளியில் ஒரு வீரரின் […]
astronaut sick

You May Like