#RainAlert; விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டத்தில் கனமழை…! வானிலை மையம் தகவல்…!

வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 1,2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அக்டோபர் 1,2 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இனி நாட்டின் அடுத்த முப்படைத் தலைமை தளபதி இவர் தான்...! புதிய நபரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு...!

Thu Sep 29 , 2022
நாட்டின் அடுத்த முப்படைத் தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை அடுத்த பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமித்தது. லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான், இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகால வாழ்க்கையில், லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான் பணியாளர்கள் மற்றும் கருவி நியமனங்கள், […]
1096146 lt gen anilchouhan

You May Like