நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை…! எல்லாம் உஷாரா இருங்க…!

நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னல்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மணிக்கு 30 கிலோமீட்டர்‌ முதல்‌ 40 கிலோமீட்டர்‌ வரை பலத்த காற்று வீசும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல்‌ 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Vignesh

Next Post

அதிரடி...! 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள்‌ விற்பனை கிடையாது...! அமைச்சர் தகவல்...!

Sat Apr 29 , 2023
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ மூலம் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள்‌ விற்பனை செய்யப்படமாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தினால்‌ 101 இடங்களில்‌ வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள்‌ செயல்பட்டு வருகிறது. இந்த சில்லறை விற்பனைக்‌ கடைகளில்‌ விற்பனை விலையை விட கூடுதல்‌ விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும்‌ புகார்களை […]
images 2023 04 29T064451.117

You May Like