சிக்கன் விலை திடீர் சரிவு.. முட்டை விலையில் மாற்றமா..? இன்றைய விலை நிலவரம் இதோ..!

egg chicken 2025 07 2ec21ea989480ea20dace778a5f36b90 1

சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் சமைத்தாலும் விதவிதமான அசைவ உணவுகளை ஓட்டல்களில் இருந்து அன்றாடம் வீட்டிற்கே வரவழைத்து உண்ணும் அளவுக்கு அசைவ பிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஓய்வு நேரத்தில், விடுமுறை நாளில் மட்டுமே அசைவம் சாப்பிட்ட நிலை இப்போது மாறிவிட்டது.


முன்பெல்லாம் அசைவ உணவுகளுக்காகவே நாட்டுக்கோழிகளை வீட்டில் வளர்த்தவர்களும் உண்டு. பிராய்லர் கோழிகள் என்பதெல்லாம் அப்போது கிடையாது. கிராமத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறி கிடக்கும் சிறுதானியங்களை தின்றுவிட்டு உற்சாகமாக அங்குமிங்கும் திரியும் நாட்டுக்கோழிகளின் இறைச்சிக்கு சுவை அதிகம். ஆனாலும், விலையை கருத்தில் கொண்டு பெரும்பாலானோர் பிராய்லர் கோழி இறைச்சியை வாங்குகிறார்கள்.

பொதுவாக விடுமுறை காலங்களில் இறைச்சி விற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக உள்ளதால் கோழி இறைச்சியின் பயன்பாடே தற்போது மிகவும் அதிகமாக உள்ளது. சமைப்பது எளிது, சுவை போன்ற காரணங்களால் கோழி இறைச்சி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கோழிக்கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நாமக்கல் பண்ணைகளின் மொத்த விற்பனையில் சிக்கன் விலையில் இந்த வாரம் மாற்றமின்றி கறிக்கோழி 1 கிலோ ரூ.106-க்கும், முட்டைக்கோழி ரூ.92க்கும் விற்பனையாகிறது. அதே போல் முட்டை ரூ.5.35 ஆக நீடிக்கிறது. மீன்கள் வரத்து காரணமாக கடலோர மாவட்டங்களில் மட்டும் சில்லறை விலையில் சிக்கன் விலை சற்று சரிந்து 1 கிலோ ரூ.200 முதல் ரூ.230 வரை விற்பனையாகிறது.

Read more: கட்சி பதவியில் இருந்து முன்னாள் MLA நீக்கம்‌…! இபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை…!

English Summary

Here is the price situation of chicken and eggs.

Next Post

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி அல்ல..!! - அமித்ஷாவை மறைமுகமாக சாடிய EPS

Sun Jul 20 , 2025
We are not fools to give us a share in the government..!! - EPS indirectly criticizes Amit Shah
deccanherald import sites dh files articleimages 2023 03 30 eps shah pti 1205076 1680189796

You May Like