கடுமையான தொற்று ஏற்பட்டதால் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தலைமை நீதிபதி (CJI) BR கவாய் டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தெலுங்கானாவிற்கு அவர் பயணம் மேற்கொண்ட போது கடுமையான தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டதால் நீதிபதி கவாய் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார், மேலும் அளிக்கப்படும் சிகிச்சைக்கு சாதகமாக பதிலளித்து வருகிறார். எனினும் தொற்று குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தலைமை நீதிபதி சீராக குணமடைந்து வருவதாகவும், அடுத்த சில நாட்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ பொறுப்புகளுக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
ஜூலை 12 அன்று நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு உரையை நிகழ்த்த தலைமை நீதிபதி ஹைதராபாத் சென்றார். அதே நாளில் தலைமை நீதிபதி கவாய், “பாபாசாகேப் டாக்டர் BR அம்பேத்கர் – அரசியலமைப்பு சபை – இந்திய அரசியலமைப்பு” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு அஞ்சல் அட்டையையும், “இந்திய அரசியலமைப்பில் கலை மற்றும் கையெழுத்து” என்ற பட அஞ்சல் அட்டைகளின் தொகுப்பையும் வெளியிட்டார். அவர் தெலங்கானா சென்றிருந்த போது தான் அவருக்கு தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
யார் இந்த பி.ஆர். கவாய்?
நீதிபதி பி.ஆர். கவாய் மே 14 அன்று இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 2007 இல் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் இவர். அவர் மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்தவர். அவர் நவம்பர் 2025 இல் ஓய்வு பெற உள்ளார், தலைமை நீதிபதியாக அவரது பதவிக்காலம் மே 14 முதல் நவம்பர் 24, 2025 வரை தொடரும். நீதிபதி கவாயின் தந்தை நீதிபதி ராமகிருஷ்ண சூர்யபன் கவாய், இந்திய குடியரசுக் கட்சியின் (RPI) நிறுவனர் ஆவார். அவர் மகாராஷ்டிரா அரசியலில் தீவிரமாக இருந்தார். 1998 இல் அமராவதி தொகுதியில் RPI கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று மக்களவை எம்.பியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : திருப்பதி ரயிலில் பயங்கர தீ விபத்து.. மற்ற ரயில்களுக்கும் பரவிய தீ.. 2 பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசம்..