இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்..
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைசுற்றல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது முதலமைச்சர் குடும்பத்தினர், திமுக மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.. அப்போது முதல்வரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்தார்..
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அடையாறு பூங்காவில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார்.. அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டதாக கூறப்படுகிறது.. அதன்படி இன்று மு.க ஸ்டாலினை பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.. இதில் முதல்வரின் உடல்நலம் மற்றும் அரசியல் நாகரிகமாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்..
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை.. இதனால் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.. ஓபிஎஸ் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
Read More : “விஜய் எம்.ஜி.ஆர். இல்ல.. எம்.ஜி.ஆர் ஜெயிச்சதுக்கே இது தான் காரணம்..“ திமுக எம்.பி. ஆ.ராஜா பரபரப்பு பேட்டி..