சென்னை அப்போலோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்ததாகவும், தொடர்ந்து உடல் நலம் நன்றாக இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. தலைசுற்றல் காரணமாக கடந்த 21-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. மேலும் அவருக்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்..
3 நாட்கள் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், மருத்துவமனையில் இருந்தே அரசு அலுவல் பணிகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் சென்னை அப்போலோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்ததாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முதலமைச்சருகு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொண்ட பிறகு உடல் நலம் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே பிரதமர் மோடி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், தோழமை கட்சி தலைவர்கள், உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். முழுமையாக உடல்நலம் பெற வாழ்த்து தெரிவித்தனர். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும், முதலமைச்சரின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தனர்.
Read more: காலையிலே சோகம்.. சுற்றுலா வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 2 பேர் பலி.. 15 பேர் படுகாயம்..!!