விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம்..!

stalin assembly

மத்திய அரசின் விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்தார்.. மேலும் “ தமிழகத்தின் மீது மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்பட்டு வருகிறது.. நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓர வஞ்சனை என்று தான் கேட்கிறோம்.. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி அதற்கு பதிலாக வளர்ச்சி அடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற விபி ஜி ராம் ஜி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


புதிதாக அறிமுகம் செய்யப்படும் விபி ஜி ராம் ஜி திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நமது எம்.பிக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக குரல் எழுப்பி உள்ளனர்.. எனினும் மக்களின் குரலை கேட்காத ஒன்றிய அரசு இந்த திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.. இந்த புதிய சட்டமானது மக்களின் தேவை அடிப்படையில் அமைக்கப்படவில்லை..

இதுகுறித்து நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.. இந்த புதிய திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புக்கு உரிமை என்று அடிப்படையில் இல்லாமல், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட உள்ள உத்தேச அடிப்படையில் வேலை அளிக்கப்பட உள்ளது..

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் 2005-ன் படி, கிராமப்புற வேலைக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இந்த திட்டத்திற்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்வது உறுதியளிக்கப்பட வேண்டும், முந்தையை ஆண்டுகளில் ஒதுக்கீட்டிற்கு குறையாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.. ஏற்கனவே பின்பற்றப்பட்ட நிதி ஒதுக்கீடு முறையை தொடர வேண்டும்.. மாநில அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதகமாக உள்ள நிலையில் இது மாநிலத்தின் நிதி சுமையை அதிகரிக்கும்.. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, வி ஜிபி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இந்த திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் எனவும் ஒன்றிய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது..” என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார்.. இதையடுத்து முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது..

Read More : “பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத் தான் தரும்..” துரோகங்களை பட்டியலிட்டு பிரதமருக்கு ஸ்டாலின் பதிலடி..!

RUPA

Next Post

வாகன ஓட்டிகளே கவனம்.. இனி இதை மீறினால் ஓட்டுநர் உரிமத்திற்கு 3 மாதங்களுக்கு தடை..! புதிய விதிகள் அமல்..!

Fri Jan 23 , 2026
சாலை பாதுகாப்பை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மோட்டார் வாகன விதிகளைத் திருத்தி மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.. புதிய விதியின்படி, போக்குவரத்து விதிகளைத் திரும்பத் திரும்ப மீறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒரு நபர் ஒரு வருடத்திற்குள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட முறை போக்குவரத்து விதிகளை மீறினால், […]
traffic bike 2025

You May Like