டாக்டர் ஜெ. ஜெயலலிதா பெயரில் இயங்கி வரும் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 3-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க ஸ்டாலின், நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான டாக்டர் பட்டத்தை வழங்கினார்.. அதே போல் ஓவியர் சந்துருவுக்கும் இன்று டாக்டர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. மேலும் 1846 மாணவர்களுக்கு கவின் கல்லூரி பட்டங்களையும் முதல்வர் வழங்கினார்..
1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார்.. 1967-ம் ஆண்டு வெளியான கந்தன் கருணை படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.. சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை, உயர்ந்த மனிதன், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களாக அமைந்ததன..
தனது நடிப்பு திறமைக்காக 2 பிலிம்ஃபேர் சவுத் விருதுகள், தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளை சிவகுமார் வென்றுள்ளார்.. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ.எம் ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார், பிரபு, மோகன், அர்ஜுன், அஜித், விஜய், சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் சிவகுமார் நடித்துள்ளார்..
70, 80களில் வெற்றிகரமான ஹீரோவாக பல படங்களில் நடித்த சிவகுமார் பின்னர் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.. காதலுக்கு மரியாதை, சேது, பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.. அதே போல் ராதிகாவுடன் இணைந்து சித்தி, அண்ணாமலை போன்ற பிரபலமான சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்..
பூவெல்லாம் உன் வாசம் படம் தான் சிவகுமாரின் கடைசி படம்.. தற்போது நடிப்பை நிறுத்துவிட்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் சிவகுமார் உரையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : Flash : மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?



