Flash : ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து.. புறக்கணிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. எந்தெந்த கட்சிகள் பங்கேற்கின்றன?

stalin governor rn ravi

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை தேநீர் விருந்து அளிக்கிறார்.. தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளுக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விஜய்யின் தவெகவிற்கும் இந்த முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..


இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.. இந்த நிலையில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்..

தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாகவும், தொடர்ந்து பல சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் இருக்கும் நிலையில், இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த தேநீர் விருந்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.. எனினும் தவெக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை..

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.. ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக இருப்பதாக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.. ஆளுநரும் தொடர்ந்து தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

RUPA

Next Post

நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? வழக்கறிஞர்களை உடனே விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

Thu Aug 14 , 2025
தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த போது, கைதான வழக்கறிஞர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. எனவே தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் […]
Advocates High court

You May Like