தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. விவரம் இதோ..

tamilnadu cm mk stalin

முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசியில் அரசு சார்பில் நடை.. மேலும் 445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் ரூ.575 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் மொத்தம் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.


தென்காசி மாவட்டம் அனந்தபுரம் அரசு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விழாவில் சிறப்புரையாற்றினார்.. அப்போது ” தென்காசி மாவட்டத்தில் மட்டும் 4 ஆண்டுகளில் ரூ.2,047 கோடி நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டும் பேசினார்.. மேலும் தென்காசி மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிட்டார்..

தென்காசி மாவட்டத்திற்கான 10 புதிய அறிவிப்புகள்

தென்காசி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பிக்கு ரூ.15 கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும்..

சங்கரன்கோயில் மேலநீலிதநலூரில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

சிவிகரி, கடையநல்லூர், திருவேங்கடத்தில் முக்கிய கண்மாய்கள் ரூ.12 கோடியில் சீரமைக்கப்படும்..

கடனா அணை ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும்..

கடையநல்லூர் வட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள் மேம்படுத்தப்படும்.

ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 கோடி செலவில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

செங்கோட்டை வட்டத்தில் அணைக்கட்டுகள், குளங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், சிவகிரியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும்.

மாராந்தாய் கால்வாய் ரூ.2 கோடி செலவில் சீரமைக்கப்படும்..

Read More : மாணவர்களுடன் சிலம்பம் சுற்றி அசத்திய முதல்வர் ஸ்டாலின்.. நீங்களே பாருங்க.. வீடியோ..!

RUPA

Next Post

ரோகிணி செய்த வேலை.. மரண பயத்தில் விஜயா.. கலேபரம் ஆன அண்ணாமலை வீடு..! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்..

Wed Oct 29 , 2025
Let's see what happened in today's episode of the serial "Siregatika Aasi".
siragadikk aasai

You May Like