“இதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்..” அதிமுக பிரமுகர் கொலை.. இபிஎஸ் காட்டம்..!

Stalin EPS 2025

மதுரையில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் திரு. செந்தில் அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.


திரு. செந்தில் அவர்கள் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்- இந்த திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை. இப்படி கொடுரமாக தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு எங்கிருந்து குற்றவாளிகளுக்கு தைரியம் வருகிறது? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வக்கில்லாத ஒரு கையாலாகாத பொம்மை முதல்வர் ஸ்டாலினின் திமுக ஆட்சி இங்கு நடப்பதால் தானே ? தனது ஆட்சியில், ஒரு சாமானியர் காலையில் தனது டீக்கடையைப் பாதுகாப்புடன் திறக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான நிலை?

இதற்கு உள்ளபடியே திரு. ஸ்டாலின் தலைகுனிய வேண்டும். உயிரிழந்த திரு. செந்தில் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் , திரு.செந்தில் அவர்களைப் படுகொலை செய்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். நான் மீண்டும் சொல்கிறேன்- தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான முதல் படி இந்த விடியா திமுக அரசை அடியோடு வீழ்த்துவதே ஆகும்!” என்று தெரிவித்துள்ளார்..

RUPA

Next Post

கவனம்..! நீங்க அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றி பெற்றதாக மெசெஜ் வந்தால் நம்பாதீங்க..! மொத்த பணமும் காலி..!

Fri Feb 6 , 2026
எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்குப் பழகிவிட்ட சில மோசடிக்காரர்கள், மக்களிடமிருந்து பணம் பறிப்பதற்காகப் புதிய தந்திரங்களை முயற்சி செய்து வருகின்றனர். ஹைதராபாத்தில் இது போன்ற ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிர்ஷ்டக் குலுக்கல் என்ற பெயரில் நகரத்தில் ஒரு பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. வாட்ஸ்அப் மூலம் 40 வயதுப் பெண்ணை அணுகிய மோசடிக்காரர்கள், அவரிடமிருந்து ரூ. 42.7 லட்சத்தைப் பறித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, இந்தச் […]
whatsapp scam

You May Like