முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் இல. கணேசனின் உடலுக்கு மலை வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா
பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல கணேசன் காலமானார்.. அவருக்கு வயது 80. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டு பாஜகவில் அதிகம் நேசிக்கப்பட்ட தலைவராகவும் இல. கணேசன் இருந்தார்.. கண்ணியமான பேச்சுக்கும் அறியப்பட்டவர் இல. கணேசன். பாஜக தேசிய செயலர், தேசிய துணை தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர்.. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. நேற்றிரவே முதலமைச்சர் ஸ்டாலின் இல. கணேசனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினார்..
இந்த நிலையில் இன்றும் சென்னை தியாகராய நகரில் வைக்கப்பட்டுள்ள இல. கணேசன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் இல. கணேசனின் உடலுக்கு மலை வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.. துணை முதல்வர் உதயநிதியும் அஞ்சலி செலுத்தினார்.. தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம், அமைச்சர், கே.என். நேரு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்..
Read More : பெரும் சோகம்! திமுகவின் முன்னோடி காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..