தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 25-ம் தேதி தென்காசிக்கு செல்வதாக இருந்தது.. ஆனால் கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தென்காசி சென்றுள்ளார்.. தென்காசியில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.. மேலும் 445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.. மேலும் ரூ.575 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.. மொத்தம் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் இந்த விழாவுக்காக தென்காசி சென்ற முதல்வருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. அந்த வகையில் வழி நெடுகிலும் கட்சி தொண்டர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. குறிப்பாக தென்காசியில் வரவேற்புக்காக மாணவர்கள் சிலம்பம் சுற்றினர்.. அப்போது சிலம்பம் சுழற்றிய வீரர், வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் சிலம்பம் சுழற்றி அசத்தினார்..



