முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்..!! இனி கலெக்டர் ஆபீஸுக்கு அலைய தேவையில்லை..!! ஈசியா விண்ணப்பிக்கலாம்..!!

TN Insurance 2026

தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் எட்டாக்கனியாக இருந்துவிடக் கூடாது என்ற நோக்கில், ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்’ மிகச்சிறந்த பாதுகாப்புக் கவசமாக செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் இம்மாபெரும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வழங்குகிறது.


அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகளைக் கட்டணமில்லாமல் பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. பச்சிளங்குழந்தைகளுக்கான பராமரிப்பு சிகிச்சைகள் தொடங்கி, இதயம், சிறுநீரகம் (டயலஸிஸ்), புற்றுநோய், விபத்து கால எலும்பு முறிவு மற்றும் கர்ப்பப்பை தொடர்பான சிகிச்சைகள் என 1,027-க்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகள் இத்திட்டத்தின் கீழ் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆண்டு வருமானம் 1,20,000 ரூபாய்க்கு குறைவாக உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இருப்பினும், இச்சிகிச்சைகளை பெறுவதற்கு காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை (Smart Card) என்பது மிக அவசியமான ஒன்றாகும். முன்னதாக, இந்த அடையாள அட்டையை பெறுவதற்குப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீட்டு மையங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டியிருந்தது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து வரும் மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சிரமம் இருந்தது.

மக்களின் இந்த இன்னல்களை போக்கும் விதமாக, தற்போது ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் மூலம் குடியிருப்புகளுக்கு அருகிலேயே காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, வட்டார மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களுக்கு வரும் பொதுமக்கள், தங்களது குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) நகல் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரது ஆதார் அட்டை நகல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். மிகவும் எளிமையாக, வருமானச் சான்றிதழை அந்தந்த முகாம் நடைபெறும் இடத்திலேயே பெற்றுக்கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் இந்த திட்டம் குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் அல்லது புகார்களைப் பதிவு செய்யவும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மக்கள் தொடர்புகொள்ளலாம். இதுவரை அடையாள அட்டை இல்லாத தகுதியுள்ள குடும்பங்கள், தங்களுக்கு அருகில் நடைபெறும் முகாம்களைப் பயன்படுத்தி உடனடிப் பதிவு செய்துகொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More : பெண்களுக்கு ரூ.5,000 மானியம்..!! சுய தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு வழங்கும் அரிய வாய்ப்பு..!! விண்ணப்பிப்பது எப்படி..?

CHELLA

Next Post

FLASH | அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகும் தமிழ் மாநில காங்கிரஸ்..? செம ஷாக்கில் எடப்பாடி பழனிசாமி..!!

Wed Jan 14 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான காய்நகர்த்தல்கள் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. அதிமுக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் நீடிக்கும் ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், தங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளது. கடந்த கால தேர்தல்களில் பெற்ற வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டு, இந்த எண்ணிக்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்பதில் […]
EPS GK Vasan 2026

You May Like