நடிகர் பப்ளு 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் பற்றி விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் வசித்து வரும் நடிகர் பப்ளு தற்போது கண்ணாண கண்ணே போன்ற சீரியலில் நடித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் தற்போது 2-வதாக திருமணம் நடந்திருப்பதாக செய்திகள் வெளியானது. இது பற்றி டுவிட்டர் , இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர். 57 வயதாகும் பப்ளு 24 வயது இளம் பெண்ணை மணப்பதா.. பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ? என கேள்விகள் டுவிட்டரில் நீண்டு கொண்டே சென்றது.
இந்நிலையில் இது பற்றி விளக்கம் அளித்துள்ளார் பப்ளு.. முதல் மனைவி பீனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் . என் மகன் அகத் பற்றி உங்கள் அனைவருக்குமே தெரியும். அவன் ஒரு ஆட்டிசம் குறைபாடு உடையவன். நானும் என் மனைவியும் நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் வாழ்க்கையில்இணைந்து பயணிக்கமுடியவில்லை. தினமும் சண்டை வந்தது. எனவே நான் தற்போது தனியாகத்தான் இருக்கின்றேன். எனது மகனை நான் வெளியில் சந்தித்து பேசுவேன்.
கடந்த ஆறு வருடமாகவே நான் தனியாகத்தான் வசித்து வருகின்றேன். மன அழுத்தம் , வலி என மனதளவில் நான் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன். திடீரென் நான் இறந்துவிடுவேனோ என்ற பயம் கூட ஏற்பட்டுள்ளது. அதனால் நான் ஜன்னல் , கதவை எல்லாம் திறந்து வைத்துதான் தூங்குவேன். இப்படி ஒரு சூழலில்தான் நான் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவள் என்னை காதலிக்கின்றாள் என தெரிந்தது எனக்கு பிறகு என் மகனை அவள் நன்றாக பார்த்துக் கொள்வா .
வயது ஒரு எண் மட்டும்தான். என நான் நினைக்கின்றேன். இதே கேள்வியை அந்த பெண்ணிடமும் நான் கேட்டிருக்கின்றேன். உங்களின் வயது எனக்கு தெரியவில்லை . நீங்கள் மட்டும்தான் தெரிகின்றீர்கள் என அவளிடம் இருந்து பதில் கிடைத்தது.
முதல் மனைவி பீனாவிடம் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி கேட்டிருக்கின்றேன். முதல் குழந்தை மீதான பயம் இரண்டாம் குழந்தை வேண்டாம் என்ற முடிவு எடுக்க வைத்துவிட்டது. எனவேதான் நான் இந்த பெண்ணை திருமணம் செய்தால் கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்வேன். எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. தற்போது வரை லிவிங்கில் இருக்கின்றோம்.
இன்னும் திருமணம் நடக்கவில்லை. விரைவில் நாங்கள் எங்கள் திருமணத்தை பற்றி தெரிவிப்போம். நான் இந்த பெண்ணுக்கு துரோகம் செய்யமாட்டேன். என நடிகர் பப்லு தெரிவித்திருக்கின்றார்.