fbpx

’3 தலைமுறை அனுபவம் உங்களுக்கு உதவும்’..!! அமைச்சர் உதயநிதிக்கு ரஜினி, கமல் வாழ்த்து..!!

தமிழக அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். முதலமைச்சர் முக.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், தலைமைச்செயலகம் வந்தடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் இருக்கையில் அமர வைத்தனர். இதையடுத்து, மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைநட்சத்திரங்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

’3 தலைமுறை அனுபவம் உங்களுக்கு உதவும்’..!! அமைச்சர் உதயநிதிக்கு ரஜினி, கமல் வாழ்த்து..!!

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

’நடிகைகளின் பெட்ரூம் பத்தியே பேசுற’..!! ’தனியா வா வச்சுக்கலாம்’..!! தயாரிப்பாளர் ராஜன் - பயில்வான் இடையே மோதல்..!!

Wed Dec 14 , 2022
இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜனும், சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதனும் மோதிக் கொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ’கட்சிக்காரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் ராஜன் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, குறுக்கிட்ட பயில்வான் ரங்கநாதன், தன்னை தகாத வார்த்தையால் ராஜன் பேசியதாக தகராறு செய்தார். அதற்கு பதிலளித்து பேசிய […]
’நடிகைகளின் பெட்ரூம் பத்தியே பேசுற’..!! ’தனியா வா வச்சுக்கலாம்’..!! தயாரிப்பாளர் ராஜன் - பயில்வான் இடையே மோதல்..!!

You May Like