பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அஸீம் மற்றும் ஷெரினா ஆகியோரை கமல்ஹாசன் விளாசி தள்ளிவிட்டார். தனலட்சுமி மீது அவர்கள் சொன்ன பொய் புகாரை குறும்படம் போட்டு காலி செய்துவிட்டார் கமல்.
அதன் பிறகு கமல் ஒரு டாஸ்க் கொடுத்தார். போட்டியாளர்கள் உருவத்துடன் பொம்மை வீட்டுக்குள் அனுப்பப்பட்டது. எதாவது ஒரு போட்டியாளர் பொம்மையை எடுத்து அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்பும் விஷயத்தை சொல்லுங்கள் என்று என கமல் கூறினார். அப்போது ராபர்ட் மாஸ்டர் வேகமாக ஆயிஷா பொம்மையை எடுத்து கையில் வைத்து கொண்டு ‘எனக்கும் எனது காதலிக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை பற்றி பேசாதீங்க. காதலில் வயது பார்க்காதீங்க’ என கூறினார்.
கமல் சென்றபின் மற்ற போட்டியாளர்களிடம் பேசிய ராபர்ட் “எனது காதலிக்கு 22 வயது தான் ஆகிறது. எனக்கு 41 ஆகிறது. பெரியப்பா வயதில் இருக்கும் ஒருவருடன் லவ் என ஆயிஷா எனது காதலை பற்றி தவறாக எல்லோரிடமும் பேசுகிறார். அதனால் தான் எனக்கு கோபம் வந்துவிட்டது” என ராபர்ட் மாஸ்டர் கூறியிருக்கிறார். நான் சிங்கிள் என இதற்கு முன் அவர் சொன்னதெல்லாம் பொய் என்பது தற்போது தான் இதன் மூலமாக தெரியவந்துள்ளது.