பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கஜோல் 90ஸ் காலத்தில் நடிக்க துவங்கி முன்னணி நடிகையாக பல ஹிட் படங்களை கொடுத்தார். இவர், தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்களின் பரீட்சியமான நடிகையானார். பின்னர், தமிழில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். இவர், இந்தியில் கிட்ட 40 படங்களுக்கு மேல் நடித்து அங்கு ஸ்டார் ஹீரோயினாக இன்றும் திகழ்ந்து வருகிறார்.
குறிப்பாக பாலிவுட் கிங் நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தால் அந்த படம் மெகா ஹிட் அடித்துவிடும். காரணம் அவர்கள் இருவரது கெமிஸ்ட்ரியும் வேற லெவலில் இருக்கும். கஜோல் கூட ஒருமுறை பேட்டி ஒன்றில் நான் மட்டும் கணவர் அஜய் தேவ்கானை முதலில் பார்க்காமல் இருந்திருந்தால், ஷாருக்கானை தான் காதலித்து திருமணம் செய்திருப்பேன் என கூறியிருந்தார். தற்போது கிட்டத்தட்ட 50 வயதாகும் கஜோல், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவரது நடிப்பில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடர் வெளியாகி சர்ச்சை கிளப்பியது. இதையடுத்து தற்போது The Trial என்ற ஹிந்தி வெப் தொடரில் கஜோல் நடித்திருந்தார். அந்த வெப் தொடரில் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு எல்லை மீறியிருக்கும் கஜோல், ஒரு காட்சியில் இரண்டு நபர்களுடன் லிப்லாக் செய்து நடித்து முகம் சுளிக்க வைத்துள்ளார். இது பெரும் சர்ச்சைக்குள்ளாகியதோடு 20 வயசுல மகள் இருக்கும்போது இப்படியா நடிப்பது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.