fbpx

அதிகாலை 5 மணி..!! குளிக்கச் சென்ற நடிகர் சடலமாக மீட்பு..!! திடுக்கிடும் தகவல்..!!

மலையாள திரையுலகில் இணை இயக்குனரும், நடிகருமான தீபு பாலகிருஷ்ணன், கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபு பாலகிருஷ்ணன் (41). இவர் கடந்த 10ஆம் தேதி அப்பகுதியில் உள்ள, இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயிலின் தெற்குக் குளத்தில் காலை 5 மணியளவில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, நீண்ட நேரம் ஆகியும் தீபு பாலகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை. இதனால், அவருடைய நண்பர்களிடம் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். ஆனால், யாருக்கும் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பின்னர் அவர் குளிக்கச் சென்ற இடத்தில் தேடியபோது, குளத்தின் அருகே அவரது உடைகள் மற்றும் காலணிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளித்து, தேடியபோது அவரது சடலம் மீட்கப்பட்டது.

அதிகாலை 5 மணி..!! குளிக்கச் சென்ற நடிகர் சடலமாக மீட்பு..!! திடுக்கிடும் தகவல்..!!

தீபு பாலகிருஷ்ணன் மலையாள திரையுலகில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஜிஜு அசோகன் இயக்கிய ‘உறும்புகள் உறங்கரில்லா’ படத்தில் அசோசியேட்டாக பணியாற்றியவர். இப்படத்தில் சிறு வேடத்திலும் நடித்துள்ளார். தீபு பாலகிருஷ்ணன் ‘மனதில் ஒருமுறை’, ‘பிரேமா’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

மிரட்டி பணம் பறித்த வழக்கு...! தாதா தாவூத்தின் நிறுவனத்துக்கு தொடர்புடைய 5 பேர் அதிரடி கைது...!

Wed Oct 12 , 2022
மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் தப்பியோடிய தாதா தாவூத் இப்ராகிமின் டி நிறுவனத்துடன் தொடர்புடைய 5 பேரை மும்பை குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். சலீம், கேங்ஸ்டர் சோட்டா ஷகீல் மற்றும் ரியாஸ் பதி ஆகியோரின் நெருங்கிய உதவியாளரும் ஆவார். ரூ. 62 லட்சம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், சோட்டா ஷகீலின் உறவினருமான சலீம், அக்டோபர் 6ஆம் தேதி வரை மும்பை குற்றப்பிரிவு நீதிமன்ற […]

You May Like