தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும், திருமணம் முடிந்த சில நாட்களில் தாய்லாந்து ஹனிமூனும் சென்றனர். அதன்பின் ஒரு வாரம் கழித்து ’ஜவான்’ படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார். கடந்த மாதம் ஸ்பெயின் சுற்றியுள்ள நாடுகளுக்கு மீண்டும் ஹனிமூன் சென்று ரொமான்ஸ் புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தார் நயன்தாரா.

தற்போது இந்தியா வந்துள்ள நயன்தாரா, மீண்டும் ’ஜவான்’ படத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ளப்போவது குறித்து ஒரு குண்டைத்தூக்கிப் போட்டுள்ளார். அதாவது, திருமணம் முடிந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ள நயன்தாரா விரும்புவதாகவும், ஆனால் உடல் அளவில் வயதான காரணத்தால் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதனால் நயன்தாரா சுமார் 9 மாதங்கள் மருத்துவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமாம். அதாவது உடல் பிரச்சனை காரணமாக எந்த வேலையும் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறவேண்டுமாம். அதன்பின் சினிமாவில் இருந்து விலகவும் திட்டமிட்டுள்ளார் என்ற செய்தியையும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும், ஒரு பெண் தாயாகும் போது வாழ்க்கை முழுமை அடையும் என்பதை நயன்தாரா உணர்ந்து படங்களில் தாலியை கழட்ட முடியாது என்ற கண்டீசனையும் போட்டுள்ளாராம். இதனால் தான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்தும் நடிகர்களுடன் நடனமாடி ரொமான்ஸ் செய்யும் படங்களையும் உதறி வருகிறாராம்”. இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.