2002-ம் ஆண்டில் வெளியான மனசெல்லாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சந்திரா லக்ஷ்மணன். அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடித்திருந்த அவர், பல்வேறு மலையாளப் படங்களிலும், மலையாள சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை சீரியலுக்கு பிறகு தான் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் சந்திரா லக்ஷ்மணன்.. குறிப்பாக 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார்..
அந்த சீரியல் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகப் போகிறது.. ஆனால் இன்றும் கூட பலரும் அந்த சீரியலின் டைட்டில் சாங்-கான ‘என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு’ பாடலை முணுமுணுத்து வருகின்றனர்.. பின்னர் வசந்தம், கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்தாலும் ஒரு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து வந்தார்.. இந்நிலையில் தற்போது ஸ்வந்தம் சுஜாதா என்ற மலையாள நிகழ்ச்சி மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.. இதனிடையே கடந்த ஆண்டு சந்திரா, சக நடிகரான தோஷ் கிறிஸ்டியை திருமணம் செய்து கொண்டார்..
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நடிகை சந்திரா வெளியிட்டுள்ளார்.. தனது சமூகவலைதளத்தில் வளைகாப்பு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.. மேலும் இருவரும் ஜூனியருக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அவருக்கு பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..