பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மைனா நந்தினிக்கு எனது நன்றிகள் என நடிகர் கார்த்தி, ‘சர்தார்’ பட விழாவில் கூறியதை அடுத்து நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அவருக்கு செம சர்ப்ரைஸ் காத்திருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகர் கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு கிடைத்த பாசிடிவ் விமர்சனம் காரணமாக வசூல் மழை பொழிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ‘சர்தார்’ படம் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு தயாரிப்பாளர் ஆடம்பர கார் ஒன்றை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ‘சர்தார்’ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கார்த்தி ‘இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட நாங்கள் கேட்டுக் கொண்டதால் மைனா ஆடிக் கொடுத்தார் என்றும் அவருக்கு எனது அன்பான நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கார்த்தி நடித்த ’விருமன்’ திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் மைனா நந்தினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மைனாவுக்கு கார்த்தி நன்றி தெரிவித்த விஷயம் அவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள இருப்பதால் இன்னும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து இதை கேள்விப்பட்டால் கண்டிப்பாக சர்ப்ரைஸ் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.