அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்த படம் போர் தொழில். பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரனையும் அந்த கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் சுற்றி சுழலும் இப்படத்தின் கதை மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது.
த்ரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடித்திருந்தார். சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுக்கு போட்டியாக சுனில் சுகாதா வில்லனாக மிரட்டினார். மலையாள நடிகையயான நிகிலா விமல் இப்படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று திரையரங்கில் ஓடியது.
இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் மீட் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் படத்தின் இயக்குனரிடம், ” உங்க படத்தின் டீமிற்கு தலைக்கனம் அதிகமாகிடுச்சா? இந்த படத்தின் காஸ்டியூம் டிசைனர் பத்திரிகையாளரை பார்த்ததும் நீங்க ஏன் மேல வரீங்க கீழ போயி உட்காருங்கனு சொல்றாரு. ஒரு படம் தானே ஹிட் ஆகிற்கு அதுக்குள்ளயா தலைகீழா குதிக்கனும் என மோசமாக திட்டினார். உடனே மேடையில் அமர்ந்திருந்த சரத்குமார் எழுந்துவந்து… தம்பி தம்பி அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். இதனால் அங்கு சிறிது சலசப்பபு ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, நெட்டிசன்ஸ் பலரும் அந்த பத்திரிகையாளரை திட்டி வருவதோடு சரத்குமாரின் செயலை பாராட்டியுள்ளனர்.