ஆஸ்கர் விருதுக்கு பாகிஸ்தான் சார்பில் தேர்வு செய்யப்பட்ட ’’ஜாய்லாண்ட்’’ என்ற திரைப்படத்தை தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணியம் மற்றும் ஒழுக்கக்கேடுகளை விளைவிக்கும் மிகவும் ஆட்சேபனைக்குரிய தகவல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக எழுத்துப்பூர்வமாக புகார்கள் குவிந்தன. இதனால் ’ஜாய்லாண்ட்’திரைப்படத்தை தடை செய்வதாக தெரிவிக்கப்பட்டு தகவல் மற்றம் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.
ஆகஸ்ட் 17ம் தேதி பாகிஸ்தான் அரசால் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த திரைப்படம் குறித்து பாகிஸ்தானில் சர்ச்சைகள் கிளம்பின. சமீபத்தில் அதன் கதை குறித்து பல்வேறு சர்சைகள் எழுந்தன. ஆட்சேபனை தெரிவித்துகருத்துக்கள் வெளியானது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கும் கோரிக்கை எழுந்தது. நவம்பர் 11ம் தேதி இத்திரைப்படத்தில் உள்ள கருத்துக்கள் மற்றும் இதை தடை செய்வது தொடர்பாக பாகிஸ்தானில் அறிவிப்பு வெளியானது. நாட்டின் சமூக விழுமியங்கள் மற்றும் தார்மீக தரங்களுடன் இந்த திரைப்படம் ஒத்து போகவில்லை என்ற அமைச்சகம் தெரிவித்தது.
நவம்பர் 18-ம் தேதி பாகிஸ்தானில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ‘ஜாய்லேண்ட்’ ஒரு ஆணாதிக்க குடும்ப கதை பற்றியது. குடும்ப பாரம்பரியத்தை தொடர ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஏங்குகிறது. அதே நேரத்தில் அவர்களின் இளைய மகன் ரகசியமாக ஒரு சிற்றின்ப நடன அரங்கில் சேர்ந்து ஒரு திருநங்கையிடம் மயங்குகிறான் இது தான் கதை.