fbpx

இசையமைப்பாளர் அனிருத் குடும்பத்தில் நிகழ்ந்த பெரும் சோகம்..!! பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்..!!

இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தாவும், இசையமைப்பாளரான எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார்.

தொலைக்காட்சி, வானொலி, விளம்பரம், திரைப்படம் என அனைத்து துறைகளிலும் தடம் பதித்தவர் எஸ்.வி.ரமணன். ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்தியவர். மக்கள் தொடர்பு கலையின் மாண்பாளர் என்று அழைக்கப்படுவர். ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் எஸ்.வி.ரமணன். சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த இவர், இன்று காலை வயதுமூப்பு காரணமாக காலமானார்.

இசையமைப்பாளர் அனிருத் குடும்பத்தில் நிகழ்ந்த பெரும் சோகம்..!! பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்..!!

எஸ்.வி.ரமணனின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். ரமணனின் தந்தை கே.சுப்பிரமணியமும் புகழ்பெற்ற இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஆவணப்படங்களையும் அவர் தயாரித்துள்ளார். ரமண மகரிஷி, ஷீரடி சாய் பாபா ஆகிய ஆன்மிக ஞானிகள் பற்றிய ஆவணப்படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றது. இவர் செய்த சாதனைகளுக்காக மக்கள் தொடர்பு கலையில் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக நடிகர் ரஜினிகாந்தை நேர்காணல் செய்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் குடும்பத்தில் நிகழ்ந்த பெரும் சோகம்..!! பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்..!!

Chella

Next Post

’சூர்யா 42’ ஷூட்டிங்கில் இப்படி ஒரு சம்பவமா? இனி சட்டப்படி நடவடிக்கை..! தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை..!

Mon Sep 26 , 2022
’சூர்யா 42’ திரைப்படம் சார்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. நடிகர் சூர்யாவின் 42-வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில […]

You May Like